Friday, November 9, 2007

கரும்புலிகள்


கரும்புலிகள்

கரும்புலிகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்புத் தாக்குதல் படையணியாகும். இது தமது இலக்கை நிறைவு செய்ய தற்கொலை தாக்குதலில் ஈடுபடத் துணியும் படையணியாகும். இவர்கள், உலகில் பயங்கரமானதும் கட்டுப்பாடு மிக்கதுமான தற்கொலை படையணியாக விளங்குகிறார்கள். 1987 ஜூலை 5 முதல் 2007 ஜூன் 27 வரை 322 கரும்புலிகள் கடலிலும் தரையிலும் நடைபெற்ற சமர்களிலும் வேறு தாக்குதல்களிலும் உயிர் நீத்துள்ளனர். இவர்களில் 81 பேர் தரைக்கரும்புலிகளும் 241 பேர் கடற்கரும்புலிகளும் ஆவர்.[1]. பெரும்பாலானோர் இலங்கையில் எல்லைக்குள் உயிர் நீத்தனர். இலங்கை குடியரசுத் தலைவர் ரணசிங்க பிரேமதாசா கரும்புலிகளின் தாக்குதலில் இறந்தவரெனக் கருதப்படுகின்றது.


தற்கொலைப் போராளியான



கரும்புலிகள் நாள்

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான மில்லர் என்பவரின் இறந்த நாள் இதுவாகும்.
விடுதலைப்புலிகளின் முதல் தற்கொலைத் தாக்குதல் 1987 யூலை மாதம் 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக மில்லரினால் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீதே நடாத்தப்பட்டது.



கப்டன் மில்லர்


கப்டன் மில்லர் (01/01/1966 - 05/07/1987; கரவெட்டி, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட வல்லிபுரம் வசந்தன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
இவரே முதல் கரும்புலியாக 05-07-1987 அன்று யாழ்-வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறீலங்கா படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார்.




Poaramma Poaramma thunayintri yaaramma

0 comments:

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro