Sunday, November 11, 2007

தமிழர்


தமிழ் மொழி

திராவிட மொழிக் குடும்பத்தில் முக்கிய மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர் (Tamils,Tamilians) எனப்படுகிறார்கள். தமிழர்கள் ஏறத்தாழ 2000 ஆண்டுகள் எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தென்னாசிய இனக்குழுவொன்றைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் எனினும், அவர்களில் பெரும்பாலானவர்களுடைய தாயகம் தென்னிந்தியாவேயாகும். இலங்கையிலும் வடக்கு, கிழக்குப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டு ஏறத்தாழ 25 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கையின் மத்திய பகுதியிலும், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து, பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்துவதற்காக அழைத்துவரப்பட்ட மேலும் பல லட்சம் பேர் உள்ளார்கள். இவர்களை விட இதே காலக்கட்டத்தில், தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள், மலாயா (இன்றைய மலேஷியா), சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் குடியேறினார்கள். பர்மாவிலும், மொரிஷியஸ், மடகாஸ்கர் போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் தமிழர்கள் பிரித்தானியாவுக்கும் சென்றுள்ளார்கள். அண்மைக்காலங்களில் விசேடமாகப் பெருமளவு இலங்கைத் தமிழர்கள் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் வாழ்கிறார்கள்.


வேறு பல இனக் குழுக்களைப் போலன்றித் தமிழர் ஒருபோதும் ஒரே அரசியல் அலகின் கீழ் வாழ்ந்தது இல்லை. தமிழகம் எப்பொழுதுமே ஒன்றுக்கு மேற்பட்ட இராச்சியங்கள் அல்லது அரசுகளின் கீழேயே இருந்து வந்துள்ளது. இருந்த போதிலும், தமிழ் அடையாளம் எப்பொழுதும் வலுவாகவே இருந்து வருகிறது. தமிழ் மொழியைப் பேசுகின்ற தமிழருடைய அடையாளம், வரலாற்று ரீதியில், சிறப்பாக மொழி சார்ந்ததாகவே இருந்துள்ளது. அண்மைக் காலங்களில் தமிழர் என்பதற்கான வரைவிலக்கணம், தமிழ் மரபுகளைப் பேணிக்கொண்டு ஆனால் தமிழ் பேசாத புலம் பெயர்ந்த தமிழர்களையும் உள்ளடக்கும் விதத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் இன அடிப்படையிலும், மொழி மற்றும் பண்பாட்டு அடிப்படையிலும் ஏனைய தென்னாசியத் திராவிட இன மக்களுடன் தொடர்பு பட்டுள்ளனர். உலகில் சுமார் 74 மில்லியன் தமிழர்கள் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.

வரலாறு

தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் (உதா. பர்போலா 1974; 2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்து புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச்.




இந்தியத் தமிழர்கள்

பெரும்பாலான இந்தியத்தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர். மேலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். அவற்றில் பெரும்பாலான குடியேற்றங்கள் தற்காலத்தில் ஏற்பட்டவையாகும். எனினும் தென்கர்நாடகத்திலுள்ள மாண்டியா, ஹெப்பார் பகுதிகளிலும் கேரளத்திலுள்ள பாலக்காட்டிலும் மகாராஷ்டிரத்திலுள்ள புனே பகுதிகளிலும் தமிழர்கள் இடைக்காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றனர்


இலங்கைத் தமிழர்கள்


தற்காலத்தில் இலங்கையில் இரண்டு குழுக்கள் உள்ளன. அவை இலங்கை தமிழர்கள் எனப்படும் பழைய யாழ்ப்பாண இராச்சியத்தில் வாழ்ந்து வந்த தமிழர்களின் வழித்தோன்றல்களாவர். மற்றொன்று இந்தியத்தமிழர்கள் அல்லது மலை-நாட்டுத் தமிழர்கள் எனப்படும் இந்தியாவிலிருந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக சென்ற மக்களின் வழித்தோன்றல்களாவர். இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இந்தியத் தமிழர்கள் மத்திய மாகாணங்களிலும் வாழ்கின்றனர். இவ்விரு குழுக்களும் முற்காலத்திலிருந்தே தங்களைத் தனித்தனிச் சமூகங்களாகவே பார்க்கின்றனர். 1960-களில் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி ஏறக்குறைய 50% மலை-நாட்டுத் தமிழர்கள் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப் பட்டனர். எனினுமஇனப்பிரச்சினைகளின் காரணமாக இவ்விரு குழுக்களும் இணைந்து செயல்படுகின்றனர். (Suryanarayan 2001).

மேலும் அங்கு தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தொகையும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. எனினும் இவர்கள் தங்களை தமிழர் இனமாக கருதாததால் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களில் இவர்கள் தனி இனக்குழுவாகவே குறிக்கப் படுகின்றனர்.


தென்கிழக்கு ஆசியாவில் தமிழர்

தென்கிழக்கு ஆசியாவுடன் தமிழர் அரசியல், வணிக, பண்பாட்டு தொடர்புகளை பேணியும், அங்கு பரவலாக வசித்தும் வருகின்றார்கள். குறிப்பாக, சோழப் பேரரசு சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது அதிகாரம் கொண்டிருந்ததால், பல தமிழர் இங்கு குடியமர்ந்து பின்னர் இனக்கலப்புக்கு உள்ளாகி இன்று அவ்நாட்டு மக்களாகவே வாழ்கின்றார்கள். ஆங்கிலேயர் காலத்தில் தமிழர் இவ்நாடுகள் சிலவற்றில் கூலிகளாக குடியமர்த்தப்பட்டனர். மலேசியா (காடாரம்), சிங்கப்பூர், பர்மா ('அருமணதேயம்'), தாய்லாந்து, இந்தோனேசியா (ஜாவா (சாவகம்), சமத்ரா), கம்போடியா, இந்தோ - சீனா ஆகிய நாடுகள் தென்கிழக்கு அசியாவில் அடங்கும்.மேலும் தென் கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கர் இன்றும் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரதை பேணி பாதுகாத்து வருவது குறிப்பிட தக்கது.பெரும்பாலான குழந்தைகள் தமிழ் பள்ளிகளில் பயிலுவதே இதற்கு சான்றாகும்.எல்லாவற்றிகும் மேலாக தனது மக்கள் தொகையில் 10% தமிழர்களை மட்டுமே கொண்ட சிங்கப்பூர் தமிழை தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது.


மொழியும் இலக்கியமும்

தமிழர்களுக்கு தமிழ் மொழியின் மீதுள்ள பற்று அளவிற்கறியது. ஏனைய பிற தென்னிந்திய மொழிகளைப் போல, தமிழும் ஒரு திராவிட மொழி. வட இந்தியாவில் பேசப்படும், இந்திய-ஐரோப்பிய மொழிகளிடமிருந்து பெரிதும் வேறுபட்டது. சமஸ்கிருத மொழியின் தாக்கம் மிக்க சிறிய அளவில் கொண்ட திராவிட மொழி, தமிழ். தமிழின் பழமை மற்றும் செழுமையின் காரணத்தால் 2005ஆம் ஆண்டில் இந்திய அரசால் தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்டது. பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும், அறவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகள் போன்ற பல கவிதைகளும் கொண்ட சங்கத் தமிழ் இலக்கியம், ஏனைய பிற இந்திய மொழிகளின் இலக்கியத்திலிருந்தும் நவீன தமிழிலக்கியத்திலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. தெற்காசிய இலக்கியத்தின் தொன்மையான மற்றும் பழமையான இலக்கியத்தில் மிகச் சிறப்பு வாய்ந்தது தமிழ் இலக்கியம் (ஜார்ஜ் ஹார்ட் 1975). தமிழின் எழுத்து நடையும், வார்ப்புருவும், மொழியும் மிகச் சிறிய அளவே தற்காலத்தில் மாற்றம் அடைந்துள்ளது. ஆகையால் தான், இன்றும் பழந்தமிழ் இலக்கியத்தினையும், சங்க கால இலக்கியத்தினையும் தமிழரால் பயிலமுடிகிறது, அதன் தாக்கமும் நவீன இலக்கியத்திலும், நவீன பண்பாட்டிலும் காணப்படுகிறது. நவீன தமிழ் இலக்கியம் பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார். பின் வந்த பல்வேறு எழுத்தாளர்களாலும் நவீன தமிழ் இலக்கியம் செழுமை பெற்றுள்ளது. முற்போக்கான கருத்துக்களும் சமூக விமர்சனங்களையும் நுட்பமாக சிறுகதைகளில் உள்ளடக்கிய புதுமைப்பித்தன், மனவோட்டத்தின் பல்வேறு தளங்களில் எழும்பும் உணர்வுகளைப் பற்றியும் அதைச் சார்ந்த கேள்விகளையும் சிறந்த சிறுகதைகளாக பதிந்த மௌனி, வரலாற்று புனைகதைகள் படைத்த கல்கி கிருஷ்ணமூர்த்தி, விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையினை படம் பிடித்த ஜி.நாகராஜன், இசையின் நுட்பத்தின் சிறப்பையும் மனித உறவுகளைப் பற்றியும் பதிந்த தி.ஜானகிராமன், பெண்ணியம் சார்ந்த உலகினை எழுத்தோவியமாக தீட்டிய அம்பை, நவீன தமிழ் சிறுகதைகளின் முன்னோடியாக கருதப்பட்ட ஆதவன், இலங்கை வாழ் தமிழ் மக்களின் நிலைப் பற்றி பதிந்த எஸ்.பொன்னுத்துரை என்று பல சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டது நவீன தமிழ் இலக்கியம்.


சமயம்

தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சங்கத் தமிழர்கள் உலகாயுத போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர் என அறிஞர் சிலர் வாதிட்டாலும், தமிழர்கள் முற்காலம் தொட்டே பல்வேறு சமய மரபுகளை அறிந்தும் பின்பற்றியும் வந்து உள்ளார்கள். பெளத்தம், சமணம், இந்து (சைவம், வைணவம், சாக்தம்), இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய பெரும் சமய மரபுகளை தமிழர்கள் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள். நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் பக்தி இயக்கம், வள்ளலார் இராமலிங்க அடிகளை பின்பற்றிய மனிதநேய இயக்கம் ஆகியவை தமிழ் சூழலில் தோன்றி சிறப்புற்றவைதான்

உடை

"ஆண்கள் அணியும் சட்டையும் அரைக்கால் அல்லது முழுக்கால் சட்டையும் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களால் அறியப்படாதவையாகும். ஆங்கிலேயரும் நவாவுப் படையினர் எனப்படும் வடநாட்டு முசுலிம்களும் வந்த பின்னரே உடம்பின் மேற்பகுதியில் 'தைத்த சட்டை' அணியும் வழக்கம் புகுந்தது

கொண்டாட்டங்கள

பொங்கல், தமிழ் புத்தாண்டுப் பிறப்பு ஆகியன சமய சார்பற்று அனைத்து தமிழர்களும் கொண்டாடும் விழாக்கள் ஆகும். தைப்பூசமும் தீபாவளியும் இந்து சமயத் தமிழர்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகைகள் ஆகும்

தமிழர் விளையாட்டுக்கள்.
வெளிக்கள விளையாட்டுக்கள்
கிட்டிப் புள்ளு
கிளித்தட்டு, தாச்சி
சடுகுடு (அல்லது) கபடி (Kabaddi)
எட்டுக்கோடு
கபடி கயிறு இழுத்தல்
முட்டி உடைத்தல்
கம்பம் ஏறல்
சங்கீத கதிரை

கிளி கோடு பாய்தல்
போர்த்தேங்காய்
பல்லாங்குழி
கண்ணாமூச்சி (Hide & Seek)
குழை எடு

உள்ளக விளையாட்டுக்கள
தாயக் கட்டை
ொக்கட்டான்

கொக்கான
பல்லாங்குழி
ஆடும் புலியும்



0 comments:

Template Designed by Douglas Bowman - Updated to Beta by: Blogger Team
Modified for 3-Column Layout by Hoctro